கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள்பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்

கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள்பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
X

கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலை

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளையும் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனுமதியின்றி சாதாரண கற்கள், கிரானைட் போன்ற கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்வதை தடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டிடும் நோக்கில், தமிழக அரசால் அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்துக்கொண்டு செல்வதை தடுத்தல், கனிம இருப்பு கிடங்கு மற்றும் கனிம விற்பனையாளர் விதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதாரண வகை கற்கள், ஜல்லி மற்றும் செயற்கை மணல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் கனிம இருப்பு கிடங்கு அமைக்க மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று நடைபெற்று வருகின்றன.

கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் கனிம இருப்பு கிடங்கு அமைக்க மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, விதிகளின்படி குற்றமாகும். னுனவே, தமிழ்நாடு கனிம இருப்பு கிடங்கு விதிகள் 2011ன் விதி 4ன்படி, கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளை மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் அளித்து உடன் பதிவு செய்திட நடவடிக்கை எடுத்திட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில், மாவட்ட நிர்வாகத்தால் மேற்படி தொழிற்சாலைகளின் மீது சட்டப்படியான மேல்நடவடிக்கை தொடரப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!