அரசு இசைப்பள்ளி மாணவர் சேர்க்கை : 12ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 12ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் பெங்களூர் சாலையில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தில் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), தவில், நாதஸ்வரம், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி நேரம் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். சேர்க்கைக்கு கல்வித் தகுதி ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதஸ்வரம், தவில், தேவாரப் பிரிவுகளில் சேர்க்கை பெற எழுத படிக்க தெரிந்திருத்தல் போதுமானது. பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சேர்க்கை கட்டணமாக ஆண்டிற்க ரூ.120 மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்த பயணச் சலுகை அளிக்கப்படும். அத்துடன் உதவித்தொகையாக மாதம் ரூ.400 வழங்கப்படும்.
இந்த இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 12ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பங்களை பெற தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பெங்களூர் சாலை (பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பு எதிரில்), கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையை இணைத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu