கோழி கழிவுகள் தீ வைப்பு பொதுமக்கள் அவதி

கோழி கழிவுகள் தீ வைப்பு பொதுமக்கள் அவதி
X
கிருஷ்ணகிரி அணை பகுதியில் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி நகரில் சந்தைபேட்டை, பழையபேட்டை மற்றும் ராயக்கோட்டை சாலையில் ஏராளமான கோழி கறி கடைகள் உள்ளது. இந்த கடைகளில் விழும் கழிவுகள் அனைத்தும் இரவு நேரங்களில் சிமெண்ட் பைகளில் மூட்டைகளாக கட்டி அதை தேவசமுத்திரம் ஏரி, சின்னஏரி மற்றும் ராயக்கோட்டை சாலையில் உள்ள கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போட்டுவிட்டு வந்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, அவ்வாறு கொட்டப்படும் கோழி கழிவுகளுக்கு தீ வைத்து விடுவதால் சுற்றுப்புற சூழல் மாசு ஏற்படும் அவல நிலையும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story