மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி புறநகர் போக்குவரத்து கழக பணிமனை எதிரில், இன்று அதிகாலை போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். இதில் தொமுச பொதுச்செயலாளர் கிருஷ்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மோடி ஆட்சியில் தனியார்மய நடவடிக்கை தீவிரமாகியுள்ளது. ஆயுள்காப்பீடு, வங்கி, ராணுவ தளவாட தொழிற்சாலை மற்றும் ரயில்வே போன்ற நிறுவனங்களையும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் முயற்சியை கைவிட வேண்டும். தற்போது சு5 விமான நிலையங்கள், 400 ரயில் நிலையங்கள், 15 விளையாட்டு அரங்கங்கள், 26,700 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள், தொலைபேசி டவர்கள், ஆயில் கம்பெனிக்கு சொந்தமான எண்ணெய் குழாய்கள் போன்றவற்றை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளதை வாபஸ் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் பரமசிவம், மத்திய சங்க துணைத் தலைவர் ஞானசேகரன், பணிமனை செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பேசினர். கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu