கிருஷ்ணகிரியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் செங்குட்டுவன் எம்எல்ஏ., போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கொத்தபேட்டா, சின்னமேலுப்பள்ளி, பையனப்பள்ளி, ஜிஞ்சுப்பள்ளி, திப்பனப்பள்ளி, போலுப்பள்ளி, ஜீனூர், சிக்காரிமேடு, கங்கசந்திரம், கக்கன்புரம், கரிகல்நத்தம், கும்மனூர், தாசரப்பள்ளி, கொண்டேப்பள்ளி, தானம்பட்டி, தேவசமுத்திரம் என 37 கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக ஜிஞ்சுப்பள்ளியில் அவருக்கு ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழ மாலையை அணிவித்து ஆரவாரம் செய்தனர்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் உங்கள் பகுதிக்கு என்ன செய்தார்கள். யாருக்காவது அரசு வேலை கிடைத்ததா. தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். வாணி ஓட்டு திட்டம் கடந்த 2010ல் கருணாநிதியால் துவக்கப்பட்டது. ஆனால் அடுத்து வந்த அதிமுக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டதால், 500 ஏரிகளில் தண்ணீர் இன்றி காய்ந்துள்ளது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திமுக ஆட்சியில் வழங்கிய ஓ.ஏ.பி. யை தற்போது பலருக்கு நிறுத்தி வைத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் அனைவருக்கும் ஓ.ஏ.பி. வழங்குவோம் என அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu