கிருஷ்ணகிரியில் புதியதாக விண்ணப்பித்த 1000 பேருக்கு ரேஷன் கார்டு வினியோகம்

கிருஷ்ணகிரியில் புதியதாக விண்ணப்பித்த 1000 பேருக்கு ரேஷன் கார்டு வினியோகம்
X
கிருஷ்ணகிரி தாலுக்காவில் புதியதாக விண்ணப்பித்த 1000 பேருக்கு குடும்ப அட்டை வினியோகம் செய்யப்பட்டது.

தமிழக அரசு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை சார்பில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைகளை வழங்கி சலுகை விலையில் நியாயவிலைக் கடைகள் மூலமாக உணவு பொருட்களை வழங்கி வருகிறது . அத்துடன், புதிய குடும்ப அட்டை கோரி நாள்தோறும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்

அவ்வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவிலும் புதிய குடும்ப அட்டை கோரி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்த பிறகு, தகுதியானவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்த நபர்களுக்கு, தேர்தல் விதிகள் காரணமாக, குடும்ப அட்டை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 31 நபர்களுக்கு, இன்று புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். விண்ணப்பித்த அனைவரையும் ஒரே நாளில் வரவழைக்காமல், குறைந்த நபர்களை வரவழைத்து, சமூக இடைவெளி முகக்கவசம் கிருமிநாசினி ஆகியவை பின்பற்றி குடும்ப அட்டை வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்