கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்.

கிருஷ்ணகிரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் தொடர் மக்கள் விரோதப்போக்கினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, நாடு முழுவதும் இயங்கும் தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை அதானி, அம்பானிகள் போன்ற தனியார் நிறுவனங்களை ஆதாரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். 4G, 5G, தொலைத்தொடர்பு சேவைகளை மத்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலைவாய்புகள் ஏற்படுத்திடவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்காமல், கார்ப்ரேட் கம்பெனிகளுக்காக மெளனம் காத்துவரும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்.

மத்திய அரசின் போக்கினை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கு மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!