குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
X
காவேரிப்பட்டணம் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அண்ணா நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சென்னம்மாள். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. அதே போல் கடந்த 26ம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சென்னம்மாள், அன்று இரவு விஷம் குடித்து படுத்துள்ளார். இன்று காலை பார்த்த போது அவர் இறந்து கிடந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!