பிஎஸ்என்எல் ஊழியர்கள் பிரசார இயக்கம்

பிஎஸ்என்எல் ஊழியர்கள்   பிரசார இயக்கம்
X
கிருஷ்ணகிரியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருவார கால பிரசார இயக்கத்தை துவங்கினர்.

கிருஷ்ணகிரியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருவார கால பிரசார இயக்கத்தை துவக்கினர். இந்நிகழ்ச்சிக்கு மாநில உதவி செயலாளர் பாபு, கிளை செயலாளர் நடராஜன் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். சங்கத்தினர் கோரிக்கை விளக்க நோட்டீஸ்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

அதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உடனடியாக 4ஜி சேவையை துவங்க வேண்டும். தனியார் மயமாக்கக்கூடாது. பங்குகளை விற்பனை செய்யக்கூடாது. 4ஜி சேவைக்கான கருவிகளை உடனே வாங்க வேண்டும். 4ஜி சேவைக்கான டெண்டரை உடனே அனுமதிக்க வேண்டும். பிஎஸ்என்எல் டவர்கள் மற்றும் ஆப்டிக் பைபர் கேபிள்களை தனியாருக்கு விற்கக்கூடாது. பொதுத்துறையை தனியாருக்கு விற்கக்கூடாது. பிஎஸ்என்எல் மற்றும் ரயில்வே சொத்துக்களை விற்று 1.3 லட்சம் கோடிகளை ஈட்டும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் நோட்டீஸ்களை வழங்கினர்.

Tags

Next Story
ai in future agriculture