கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 301 படுக்கைகள்: கலெக்டர் தகவல்

கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 301 படுக்கைகள்: கலெக்டர் தகவல்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா சிறப்பு சிகிச்சை மேற்கொள்வதற்காக, கூடுதலாக 301 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா சிறப்பு சிகிச்சை மேற்கொள்ள, கூடுதலாக 301 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை அரசு மருத்துவமனையில் உள்ள 544 படுக்கைகள், தனியார் மருத்துவமனையில் உள்ள 215 படுக்கைகள் என மொத்தம் 769 படுக்கைகள் உடனடியாக சிகிச்சை அளிக்கும் விதமாக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது அரசு மருத்துவமனையில் 264 படுக்கையிலும், தனியார் மருத்துவமனையில் 201 படுக்கையிலும் என மொத்தம் 465 படுக்கைகளில் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டவர்கள் சிகிச்கை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதுகாப்பு மையத்தில் உள்ள 585 படுக்கைகளில் தற்பொழுது 172 படுக்கைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் 80 படுக்கைகளும், ஓசூர் எஸ்.பி.எஸ். காவேரிப்பட்டணம் ஜி.பி., கிருஷ்ணகிரி ஸ்ரீ அருணாசலா மருத்துவமனை, ஓசூர் ஜெனரக்சா மருத்துவமனை, ஓசூர் புனித பீட்டர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை,. ஓசூர் லட்சுமி மருத்துவமனை ஆகிய 6 மருத்துவமனைகளில் படுக்கைகள் என மொத்தம் 301 படுக்கைகள், கூடுதலாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 242 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அரசு அனுமதி பெற்று செயல்பட தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!