வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியே சென்ற 4 ஆசிரியர்கள்: சிஇஓ நடவடிக்கை

வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியே சென்ற 4 ஆசிரியர்கள்: சிஇஓ நடவடிக்கை
X

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியே சென்ற 4 ஆசிரியர்கள் மீது சிஇஓ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதில் பள்ளியில் பல ஆசிரியர்கள் பணிக்கு வராதது தெரிய வந்தது. மேலும் வருகை பதிவேட்டை ஆய்வு செய்த போது தினமும், 30 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுத்து இருந்தது தெரிய வந்தது.

வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, பள்ளியின் வெளியே டீ குடிப்பதற்காக நான்கு ஆசிரியர்கள் சென்றிருந்ததும் தெரிந்தது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சி.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 74 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் இன்று மட்டும், 22 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. சுமார் 30 சதவீத ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வராமல் இருந்து வருவது தெரிய வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளையும் வீடியோ மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!