கிருஷ்ணகிரி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10,000 பேர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10,000 பேர் பங்கேற்பு
X

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கலந்துக் கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாயிரம் பேர் வரை பங்கேற்றனர்.

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஏற்பாட்டின் பேரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் TVS , அசோக் லேலண்ட், டைட்டன், டெல்டா எலக்ட்ரானிக், உள்ளிட்ட 95 முக்கிய நிறுவனங்கள் பங்கேற்றன.

10 வகுப்பு தோல்வி முதல் பட்டதாரிகள் வரை தகுதியாக கொண்டு இந்த முகாம் நடைபெற்றது. முதற்கட்டமாக ஆயிரம் நபர்கள் இன்று தேர்வாகினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கலந்துக் கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக அரசின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு துறை இணைந்து படித்த வேலையற்ற இளைஞர்கள் பயன்பெற இது போன்ற முகாம்களை நடத்த இருக்கிறது. எனவே இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இளைஞர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ப உடனடியாக தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தங்களின் தேவைக்கு ஏற்ப நிறுவனங்கள் இளைஞர்களை தேர்வு செய்யும். எனவே இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare