விபச்சார விடுதியில் கொலை-2 பேர் கைது
கிருஷ்ணகிரியில் கள்ளதனமாக நடைபெற்ற விபச்சார விடுதியில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியில் மதுரை மாவட்டம் செக்கானூரணி கிராமத்தை சேர்ந்த ஜெயமணி மற்றும் தேவபாண்டியன் ஆகிய இருவர் ரகசியமாக பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்துள்ளனர்.இந்நிலையில் சம்பவத்தன்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென வீட்டின் உள்ளே புகுந்து ஜெயமணி மற்றும் தேவபாண்டியன் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் ஜெயமணி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த தேவபாண்டியன் தப்பி வந்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த தேவபாண்டியனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த ஜெயமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த தேவபாண்டியனிடம் சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் நண்பர் ஜெயமணி உடன் சேர்ந்து விபச்சார தொழில் செய்வதும் கொலையாளிகள் இருவரும் இன்று இரண்டாவது முறையாக வந்த போது தாங்கள் பெண்களை சந்திக்க அனுமதி மறுத்ததால் குடி போதையில் எங்கள் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு சென்று விட்டனர் என கூறி உள்ளனர்.
தகவலின் அடிப்படையில் துப்பு துலக்கிய போலீசார் சிறிது நேரத்திலேயே அகிலன், அகர்நிவாஸ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கிருஷ்ணகிரியை அடுத்த பில்லனகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மீது கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu