கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து- 6 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து- 6 பேர் பலி
X

கிருஷ்ணகிரி அருகே அரசுப்பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த எட்டு பேர் பெங்களூரிலுள்ள சுற்றுலா தளத்திற்கு கார் மூலம் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வந்த வாகனம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே வந்து கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்ற அரசு பேருந்தில் இருந்து இறங்கிய தேவராஜ் என்பவர் சாலையை கடக்க முயன்றபோது அவர் மீது கார் மோதியதுங. மேலும் அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சாலையை கடந்த தேவராஜ் மற்றும் ஆம்னி வாகனத்தில் வந்த பிரசாந்த், லிங்கா சுரேந்தர், சிவகுமார் மற்றும் அதன் ஓட்டுநர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் கௌதம், பரணி, அசோக் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்,

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டினம் போலீசார் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai and smart homes of future