கொரோனாவால் பலியான மனைவி: பிரிவை தாங்க முடியாமல் கணவன் தற்கொலை

கொரோனாவால் பலியான மனைவி: பிரிவை தாங்க முடியாமல் கணவன் தற்கொலை
X
ஓசூர் அருகே, கொரோனாவால் பலியான மனைவியின் பிரிவை தாங்க முடியாத கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தசரத்குமார், (22) கட்டிட தொழிலாளி. ஓசூர் சிப்காட் பகுதி, பேகேபள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில், கடந்த மே, 24ல், தசரத்குமார் மனைவி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

அப்போது இருந்தே, மனைவியின் நினைவாகவே இருந்து வந்த அவர், சரிவர வேலைக்கு செல்லாமல் விரக்தியாக காணப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு, வீட்டின் அருகேயுள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை அங்கு சென்ற தசரத்குமாரின் தந்தை, மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து, தசரத்குமாரின் தந்தை வெங்கடேசன் அளித்த புகாரின்படி, ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!