மத்திய அரசுடன் மோதல் போக்கை கைவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்:ஹெச்.ராஜா

மத்திய அரசுடன் மோதல்  போக்கை கைவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்:ஹெச்.ராஜா
X
ஆட்சிக்கு வந்த திமுக 6 மாதங்களில் குறைந்தது, வடிகால்களையாவது சீரமைத்திருக்க வேண்டும்

மத்திய அரசு உடனான சண்டைப்போக்கை கைவிட்டு திமுக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றார் :எச்.ராஜா.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பண்டிட் தீனதயாள் உபாத்யா பயிற்சி முகாமில் பங்கேற்ற பாஜக சிறப்பு அழைப்பாளர் எச்.ராஜா பத்திரிகையாளர்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது 2011ஆம் ஆண்டிற்க்கு முன்பு திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி சென்னையில் 630 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டபோதும் 2015 மிகப்பெரிய பாதிப்பு ஏற்ப்பட்டது. ஆட்சிக்கு வந்த திமுக 6 மாதங்களில் குறைந்தது, வடிகால்களையாவது சீரமைத்திருக்க வேண்டும். நீட்தேர்வில் பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று நீட் தேர்வு குறித்த பிதற்றல்களை பொய்யாக்கியுள்ளனர். இனி நீட் தேர்வில் தமிழக கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் தமிழகத்தில் 3 வேலைகள் மட்டுமே சரியாக செய்யப்படுகிறது. மத்திய அரசின் உதவியால் தடுப்பூசி செலுத்தும் பணி, ரேசன் கடையில் 5கிலோ அரிசி,1கிலோ பருப்பு மற்றும் 10வது முறையாக வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படுவதை தவிர எதுவுமில்லை

தமிழக கோயில்களில் உள்ள தங்க நகைகளை எடுக்க, கையில் சாக்குபையுடன் கோயில் கோயிலாக சென்ற ஸ்டாலின், சேகர்பாபுவின் செயலை நீதிமன்றம் தடுத்துள்ளது. திமுக ஆட்சியில் பொய்,போலி, பிரிவினைவாதம் மட்டுமே உள்ளதென்பதால், மத்திய அரசு உடனான மோதல் போக்கை கைவிட்டு, சண்டைக்காரர்களான வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் தூபம் போட்டாலும் தமிழக அரசு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டார்

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!