ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பு
X
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1055 கன அடியாக அதிகரிப்பு

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று, 788 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில் இன்று 1055 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

அணைக்கு நேற்று வினாடிக்கு, 788 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 267 கன அடி அதிகரித்து 1055 கன அடியாக உள்ளது.

அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.98 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில், 900 கன அடி, வலது, இடது வாய்க்கால் பாசனத்திற்கு, 88 கன அடி என, 988 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நுங்கும், நுரையுமாக தண்ணீர் வெளியேறுகிறது.

மேலும் கெலவரப்பள்ளி, மொரணப்பள்ளி, பாத்தகோட்ட, ஆழியாளம், பேரட்ணடப்பள்ளி ஆகிய பகுதிகளில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!