ஓசூரில் குடிநீர் கட்டணத்தை உயர்த்திய மாநகராட்சியை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

ஓசூரில் குடிநீர் கட்டணத்தை உயர்த்திய மாநகராட்சியை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குடிநீர் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

ஓசூரில் குடிநீர் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஓசூர் மாநகராட்சியாக அறிவிப்புக்கு பின் குடிநீர் கட்டணத்தை மூன்று மடங்காக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு வசூல் செய்து வருகின்றனர்.

சாலை வசதி கழிவுநீர் கால்வாய் தெருவிளக்கு மயான சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணத்தை மட்டும் வருடத்திற்கு ரூ 480 ஆக இருந்ததை 1500 வரை மூன்று மடங்காக உயர்த்தி கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil