ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் மூதறிஞர் ராஜாஜி 143 வது பிறந்த நாள் விழா

ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் மூதறிஞர் ராஜாஜி 143 வது பிறந்த நாள் விழா
X

மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த ஊரான தொரப்பள்ளி கிராமத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் ஆர்.காந்தி..

உடன் கிரு

ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் மூதறிஞர் ராஜாஜி 143 வது பிறந்த நாள் விழாவில் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த ஊரான தொரப்பள்ளி கிராமத்தில் 143 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவச்சிலைக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த தமிழக முதல்வர்கள் காமராஜ், கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் உட்பட பல்வேறு தலைவர்களுடன் பங்கேற்ற புகைப்படங்களை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த உங்களைப் போன்ற தியாகிகள் வாழ்ந்த நாட்டில் தாங்கள் பிறந்த மண்ணில் உங்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்ததில் பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!