ஓசூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் காய்கறிகள் விலை ஏற்றம்

ஓசூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் காய்கறிகள் விலை ஏற்றம்
X

பைல் படம்.

ஓசூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

ஓசூர் தகுந்த சூழ்நிலை உள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டு பலனடைந்து வருகின்றனர். தற்போது தொடர் மழை காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை விவசாயிகள் சந்தைப்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

இதனால் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டில் விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தக்காளி கடந்த சில நாட்களாக 40 ரூபாய் 50 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ100ஐ தாண்டியது.

இதேபோல் மற்ற காய்கறிகளான பீன்ஸ் 90 ரூபாய் முதல் 100 வரையும்,கத்திரிக்காய் 80 ரூபாயும் பீன்ஸ் 90 கேரட் 50 குடைமிளகாய் 110 விற்பனை செய்யப்படுகிறது இதுபோல் மற்ற காய்களும் ரூபாய் 60க்கு மேல் தான் விற்பனை செய்கின்றனர்.

இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த வேதனை அடைந்து காய்கறி விலைய கூடிய இப்பகுதியிலியே கூடுதலாக உள்ளது மற்ற மாவட்டங்களில் இன்னும் கூடுதலாக தான் இருக்கும் என தெரிவித்தனர்.

எனவே அரசு காய்கறி விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு