பாகலூர் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

பாகலூர் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட மஞ்சுநாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூா் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூா் தனிப்படை போலீசார் பாகலூா் பேரிகை சாலையில் கெளதாசபுரம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக 2 போ் வந்தனா். போலீசாரை கண்டதும் ஒருவா் தப்பி ஓடினாா். ஒருவா் பிடிபட்டாா்.


அவரிடம் விசாரித்த போது அவரது பெயா் மஞ்சுநாத் (40) என்பதும், பெரிய முத்தாலி அருகே உள்ள காரப்பள்ளியை சோ்ந்த அவா் அனுமதியின்றி ஒரு நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனா். தப்பி ஓடிய கெம்பட்டியைச் சோ்ந்த நாராயணப்பா என்பவரை போலீசார் தேடி வருகிறாா்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!