ஓசூர் அருகே அடையாளம் தெரியாத பிக்கப் வேன் மோதி மாற்றுத்திறனாளி சாவு

ஓசூர் அருகே அடையாளம் தெரியாத பிக்கப் வேன் மோதி மாற்றுத்திறனாளி சாவு
X

பைல் படம்.

ஓசூர் அருகே சைக்கிள் மீது அடையாளம் தெரியாத பிக்கப் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் மாற்றுத்திறனாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளி பக்கமுள்ள கோவிந்தஅக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் பெத்தன்னா. கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பெங்களூரு-ஓசூர் சாலையில் சிப்காட் பஸ் நிறுத்தம் அருகில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டக்கூடிய சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பிக்கப் வேன் ஒன்று அவர் மீது மோதி நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயம் அடைந்த பெத்தன்னா சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!