விநாயகர் ஆலயத்தில் உடைத்த ஒரு தேங்காயில் இரண்டு தேங்காய்: பக்தர்கள் ஆச்சரியம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஞான சக்தி விநாயகர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டின்போது இறைவனுக்கு உடைக்கப்பட்ட தேங்காய் ஒன்றில் இரண்டு தேங்காய்கள் இருந்தது கண்டு பக்தர்கள் ஆச்சரியத்துடன் வணங்கி சென்றனர்.
ஒவ்வொரு பவுர்ணமி முடிந்தும் நான்காவது நாள் சதுர்த்தி தினமாகும். விநாயகப் பெருமானுக்கு உகந்ததாக கூறப்படும் சதுர்த்தி தினத்தன்று வாழ்க்கையில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்படும் இன்னல்களை களைய, சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள் நடத்தி விநாயகப்பெருமானை வணங்குவது வழக்கம்.
அதன்படி கார்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமையில் அமையப் பெற்றுள்ள சங்கடஹர சதுர்த்தி தினம் விசேஷமானதாக கருதி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஓசூர் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஞான சக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக கணபதி ஹோமம் நடத்தப்பட்டு மூலவர் சுவாமி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து இறைவன் தங்கக் கவசம் அணிந்து சொர்ண அலங்காரத்தில் காட்சியளித்தார்.
அப்போது நடைபெற்ற வழிபாட்டில் விநாயகருக்கு நிவேதனமாக உடைத்த ஒரு தேங்காயில் 2 தேங்காய்கள் உருவாகி உள்ளதை கண்ட பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின்னர் நடைபெற்ற ஆராதனைகளை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வணங்கிச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu