/* */

ரூ.100க்கு விற்ற தக்காளி ரூ.3க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.100க்கு விற்ற தக்காளி ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

HIGHLIGHTS

ரூ.100க்கு விற்ற தக்காளி ரூ.3க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ராயக்கோட்டை, ஆலப்பட்டி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி, வேப்பனஹள்ளி ஆகிய பகுதிகளில் அதிகளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக ராயக்கோட்டைக்கு அதிகளவில் தக்காளி வரத்தொடங்கியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். இதனால் தக்காளி செடிகள் காய்ந்து அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Updated On: 3 March 2022 5:50 AM GMT

Related News