ஓசூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.140க்கு விற்பனை

ஓசூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.140க்கு விற்பனை
X

ஓசூர் உழவர் சந்தையில் தக்காளி வாங்கும் பொதுமக்கள். 

ஓசூரில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.140க்கு விற்பனையானதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உழவர் சந்தையில் தக்காளி கிலோ, 100 ரூபாயாகவும், வெளிச்சந்தைகளில், 140 ரூபாய்க்கு விற்றதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால், தக்காளி செடிகள் அழுகி சாகுபடி குறைந்து, விலை தாறுமாறாக உயர்ந்தது. ஓசூரில் ஒரு கிலோ தக்காளி, 120 ரூபாய்க்கு மேல் விற்றது. இந்நிலையில் ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரத்தானதால், தக்காளி விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம், 50 ரூபாய் வரை விற்பனையானது.

இந்நிலையில் வரத்து குறைந்து, ஓசூரில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்தது. உழவர் சந்தையில் தரத்திற்கு ஏற்றார்போல், 85 முதல், 100 ரூபாய் வரை விற்கப்பட்டன. வெளி மார்க்கெட்டுகளில் 140 ரூபாய் வரை விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடையந்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு