போலி மதுபானங்கள் தயாரித்த மூன்று பேர் கைது: போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

போலி மதுபானங்கள் தயாரித்த மூன்று பேர் கைது: போலி மதுபாட்டில்கள் பறிமுதல்
X

போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

ஓசூர் அருகே போலி மதுபானங்கள் தயாரித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு 750 போலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கர்நாடகா மதுபானங்கள் விற்பனை அதிகரித்து வந்தது. இதை அடுத்து மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கர்நாடக மதுபானங்கள் விற்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஓசூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்பனை திடீரென அதிகரிக்க துவங்கியது. இதனால் சந்தேகமடைந்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஓசூர் அடுத்த கதிரேப்பள்ளி பகுதியில் போலி மதுபான நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் செல்வராகவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்வராகவன் தலைமையில் 6 பேர் கொண்ட போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக நோட்டம் விட்டு வந்தனர். அப்போது ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஒரு கட்டிடத்தில் போலி மதுபானங்கள் தயார் செய்து விற்பனை செய்வதை அறிந்து போலீசார் இன்று காலை திடீரென அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 750 தமிழக மதுபானங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் விலை மலிவான கர்நாடகா மதுபானங்கள் வாங்கிவந்து இங்கு போலியாக தமிழக மதுபானங்களாக தயாரித்து அதற்கு தமிழக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு அச்சு அசல் தமிழக மதுபான போல் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த 750 போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, கோபால், கணேஷ், போத்திராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்து, கார், மினி வேன், இருசக்கர வாகங்களை பறிமுதல் செய்துள்ளார்.

மேலும் தலைமறைவான நாகரஜை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். ஓசூரில் போலி தமிழக மதுபானங்களை தயாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!