பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வாக்குகளை பெற்றவர்கள் திமுகவினர்: தம்பிதுரை

பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வாக்குகளை பெற்றவர்கள் திமுகவினர்:  தம்பிதுரை
X

ஒசூரில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை.

பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வாக்குகளை பெற்றவர்கள் திமுகவினர் என தம்பிதுரை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல ஓசூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தம்பிதுரை, பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது திமுகவின் வழக்கம், கலைஞர் இருக்கும்போது கூட 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் எனக்கூறி ஏமாற்றி மக்களிடம் வாக்கு வாங்கினார். ஆனால் நிலம் கொடுக்கவில்லை.

தற்போது கூட ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்கிறோம், கடன்களை ரத்து செய்கிறோம், என பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களிடம் வாக்குகளை பெற்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வை ரத்து செய்தார்களா, கடன்களை ரத்து செய்தார்களா, எதுவும் இல்லை, நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை, கொலை கொள்ளை நடந்து வருகிறது.

பெண்கள் நடமாட முடியாத அளவுக்கு நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது என்று மக்களுக்கு தெரியும். கட்டப்பஞ்சாயத்தில் நிலங்களெல்லாம் ஆக்கிரமிப்பு நடந்து கொண்டு வருகிறது. நாங்கள் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கிறோம்; எதிரி கட்சியாக இல்லை. எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளுகின்ற திமுக வழி தவறி செல்கிறது நீங்கள் நல்வழியில் செல்லுங்கள் என்று சரியாக ஆட்சி நடத்துங்கள் என்று சொல்வதற்காக இந்த ஆர்ப்பாட்டம். வருமானவரி சோதனை குறித்த கேள்விக்கு, குதிரை மீது சவாரி செய்வது வழக்கம் குதிரையான எங்கள்மீது ஏறி திமுக சவாரி செய்கிறார்கள் செய்யட்டும் எதையும் சுமக்க தயாராக இருக்கிறோம். மக்கள் செல்வாக்கு இருக்கிறது; திறமை இருக்கிறது; வலிமை இருக்கிறது; குதிரை திமிரினால் கீழே விழுவது அவர்கள் (திமுக) விரைவில் விழுந்து விடுவார்கள் என்றார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!