ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்பு மனு தாக்கல்

ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்பு மனு தாக்கல்
X

ஒசூர் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்த பெண்.

ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சியாக இருந்த நிலையில் 2019 ஆம் வருடம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது ஓசூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் 45 வார்டுகள் உள்ளது. இதில் 23 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அலுவலகத்தில் 5 அலுவலகங்களாக பிரிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. வேட்பு மனுக்கள் பெறப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அரசு கொரானா விதிமுறைகளையும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 28ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இதுவரை திமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, சுயேச்சை என 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!