டிரைவர் இல்லாமல் ஓடிய லாரி சுவரை இடித்து சுகாதார நிலையத்திற்குள் புகுந்தது

டிரைவர் இல்லாமல் ஓடிய லாரி சுவரை இடித்து சுகாதார நிலையத்திற்குள் புகுந்தது
X

ஒசூர் புறவழிச்சாலையில் டிரைவர் இல்லாமல் ஓடி சுகாதார நிலைய சுற்றுச்சுவரை இடித்து நிற்கு லாரி

திடீரென லாரியின் முகப்பு விளக்குகள் எரியாததால் லாரியை நிறுத்தி பழுதை சரிசெய்து கொண்டிருந்தபோது இவ்விபத்து ஏற்பட்டது

ஒசூர் புறவழிச்சாலையில் டிரைவர் இல்லாமல் ஓடி, சுற்றுச்சுவரை இடித்து சுகாதார நிலையத்திற்குள் லாரி புகுந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, பெங்களூர் புறவழிச்சாலையான சீதாராம் நகரில் நகரப்புற அரசு சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.சேலம் வாழப்படி பகுதியிலிருந்து பெங்களூர் கூடல்கேட் நோக்கி சிமெண்ட் மூட்டைகளை கொண்ட லாரியினை கிருஷ்ணன்(42) என்பவர் ஓட்டி வந்தார். திடீரென லாரியின் முகப்பு விளக்குகள் எரியவில்லை. சீதாராம் நகரில் இரவு லாரியை நிறுத்திய கிருஷ்ணன் பழுதடைந்த பல்புகளை சரிசெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது..

அப்போது எதிர்பாராத விதமாக லாரி டிரைவரின்றி தானாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் சுற்றுச்சுவரை உடைத்து புகுந்தது. இவு நேரம் என்பதால் நோயாளிகள், பொதுமக்கள் யாருமில்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.. மருத்துவமனை முன்பக்கம் சேதமடைந்திருப்பது குறித்து, மருத்துவர் அளித்த புகாரின் பேரில் நகர போலீலார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!