ஓசூரில் விமானநிலையம் அமைக்க தமிழக அரசு துரிதநடவடிக்கை : தொழில்துறையினர் வரவேற்பு
பைல் படம்
ஓசூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு துரித நடவடிகை எடுத்து வருவதற்கு தொழில் அதிபர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொழில் நகரமான ஓசூர் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது விமான சேவையும் தொடங்க உள்ளது. தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே கூறலாம்.
மத்திய அரசு கடந்த சில வருடங்களுக்கு முன்பே ஓசூரில் உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அருகே உள்ள பெங்களூர் பகுதியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலை உள்ளதால் ஓசூரில் விமான சேவை தொடங்குவது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணம் அங்கு வந்த எதிர்ப்பு தான். ஆனால் தற்போது அனுமதி கிடைத்துள்ளதால் , தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ( TIDCO) மூலம் ஒப்பந்தப் புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டது.
ஓசூர் தொழில் துறை வளர்சிக்கு முக்கிய தேவையானது விமான நிலையமும் ஒன்றாக கருதப்பட்டது. இதற்கு ஓசூர் தொழிலதிபர்களும் தொழிற்சாலை நிறுவனங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடன் துரித நடவடிக்கை எடுத்து பெங்களூர் விமான நிலைய நிர்வாகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று ஓசூரில் விமான நிலையம் அமைப்பதிற்கான இடத்தை தேர்வு செய்வதற்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ( TIDCO) மூலம் ஒப்பந்தப் புள்ளி கோரி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.இதற்காக ஹோஸ்டியா சார்பாக தமிழக முதல்வருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்
ஓசூரில் விமான நிலையம் வருவதின் மூலமாக இங்குள்ள பெரிய மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்,கிரானைட் தொழிற்சாலைகள் பெருமளவு வளர்ச்சி அடையும்.மேலும் பல சர்வதேச நிறுவனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்கள் உற்பத்தி ஆலையை அமைக்க இந்த விமான நிலையம் ஏதுவாக இருக்கும். மற்றும் ஓசூரிலிருந்து மலர்கள்,காய்கறி போன்றவை ஏற்றுமதி செய்ய இந்த விமான நிலையம் பேருதவியாக இருக்கும். விமான நிலையம் ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமையும் பட்சத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்கள் மற்றும் அண்டை மாநில மக்களும் விரைவாக வந்து செல்ல வசதியாக இருக்கும் என இப்பகுதி தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu