ஒசூர் அருகே மூழ்கிய தரைப்பாலம்: கிராம மக்கள், தொழிலாளர்கள் பரிதவிப்பு
ஒசூர் அருகே பேகேப்பள்ளியில் நீரில் மூழ்கிய தரைப்பாலம்.
தமிழக கர்நாடகா மாநில எல்லையான சர்ஜாபுரா, சந்தாபுரா, அத்திப்பள்ளி உள்ளிட்ட கர்நாடகா பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இந்த கிளை ஆறு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி வழியாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.
அதிகப்படியான வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒசூர் அருகே பேகேப்பள்ளியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது.
தரைப்பாலத்திற்கு மேலாக 5 அடி உயரத்திற்கு நீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு போலீசார் சார்பில் யாரும் செல்லாத வகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நல்லூர், பாரூர், கக்கனூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தரைப்பாலத்தினை கடந்து தான் பேகேப்பள்ளி அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள், ஒசூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்ல வேண்டும், அதேப்போல ஒசூர் பகுதியினரும் தொழிற்சாலை உள்ளிட்டவைகளுக்காக தரைப்பாலத்தை கடந்துதான் எதிர் பகுதிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கனமழை காலங்களில் தரைப்பாலம் நீரில் மூழ்கி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவது தொடர்வதால் 10கிமீ துரம் சுற்றிவர வேண்டி உள்ளது.
30ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தரைபாலத்தை உயிரிழப்புகள் ஏற்படும் முன்பு மேம்பாலமாக அமைத்திட வேண்டுமென பேகேப்பள்ளி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu