விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாம்

விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாம்
X

ஓசூரில் விவசாய பம்புசெட்டுக்கு மின் இணைப்பு பெற இலவச மற்றும் சுயநிதி ஆகிய அனைத்து திட்டங்களில் விண்ணப்பித்திருந்த விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஒசூரில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்திருந்த ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மின்சார வாரிய கோட்டத்தில் இலவசம் மற்றும் சுயநிதி ஆகிய அனைத்து திட்டங்களில் விவசாயிகள் மின் இணைப்பிற்கு விண்ணபித்து பல ஆண்டுகளாக காத்திருந்த ஆயிரக்கணக்கான விவாசயிகள், தற்போது மின் இணைப்பு பெற்றுக்கொள்ள தமிழக அரசால் விவசாயிகளுக்கு அழைப்பாணை கடிதம் வழங்கி உள்ளது.

மேலும் விவசாயிகள் விண்ணப்பித்து இருந்த ஆவணங்களில் பெயர் மற்றும் சர்வே எண் திருத்தம் இருந்தால் அதனை சரி செய்து கொள்ள சிறப்பு முகாம் ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது.

இதில் ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில் இலவச மின் இணைப்பு, மற்றும் 10, 25, 50 ஆயிரம் வைப்பு தொகை திட்டத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்திருந்த விவசாயிகள் இதில் கலந்து கொண்டு 657 விவசாயிகள் பயன்பெற்றார்கள்.

மேலும் யாராவது விடுப்பட்டிருந்தால் அவர்கள் அந்தந்த பின் பகிமரம் நிலையங்களில் நேரடியாக சென்று பெயர் மற்றும் சர்வே எண் திருத்தம் செய்து கொள்ளனம் என ஓசூர் மின்சார வாரியம் செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business