மாநில எல்லையான ஓசூரில் முன்னெச்சரிக்கை சோதனையில் மெத்தனம்

மாநில எல்லையான ஓசூரில் முன்னெச்சரிக்கை சோதனையில் மெத்தனம்
X

ஓசூர் ஜூஜூவாடியில் சோதனை செய்யாமல் அனுமதிக்கப்படும் வாகனங்கள்.

மாநில எல்லையான ஓசூரில் கொரோனா முன்னெச்சரிக்கை சோதனை மற்றும் கண்காணிப்பில் மெத்தனம் ஏற்பட்டுள்ளது.

தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியில் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால் சோதனை என்பது வெறும் கண்துடைப்பாக உள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2ம் தேதி இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதால், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் கடந்த 3ம் தேதியில் இருந்து கண்காணிப்பு பணி நடந்தது. துவக்கத்தில் அனைத்து வாகனங்களுக்கும், கிருமிநாசினி தெளித்த நிலையில், தற்போது அது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது பெயரற்கு மற்றும் அங்கு ஊழியர்கள் உள்ளனர். ஆனால் எந்த வாகனத்தையும் நிறுத்தி சோதனை செய்வதில்லை.

கர்நாடகாவில் நேற்று முன்தினம் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் தமிழகத்திலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கர்நாடகாவிலிருந்து தமிழகத்திலுள்ள ஓம்சக்தி கோவிலுக்கு அதிகளவில் கர்நாடக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வருகிறார்கள். இதில் பலர் தடுப்பூசி செல்லுத்தி கொள்ளாமலும் வருகிறார்கள்.

எனவே, அரசு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தாவிட்டால் ஒமைக்ரான் பரவல் தமிழகத்திற்குள் மேலும் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாநில எல்லையில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!