தடைசெய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்
X

குட்கா பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட மூவர்.

ஓசூரில் தடைசெய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையின் போது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருளைப் ஏற்றி வந்த டெம்போ வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஜெகதீஷ் 46, ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ்குமார் 34, பாப்பிரெட்டிப் பட்டி பகுதியை சேர்ந்த சென்னப்பன் 37 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப் பொருள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்