மகளிர், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

மகளிர், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
X

செம்பரசணப்பள்ளி கிராமத்தில், காவல்துறை சார்பில் நடந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்.

செம்பரசணப்பள்ளியில், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம், காவல்துறையினரால் நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்படி, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாவித்திரி தலைமையில், செம்பரசணப்பள்ளி கிராமத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில், குழந்தை திருமணங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்பது பற்றியும், பெண்களுக்கு ஏற்படும் வரதட்சணை கொடுமைகள்,பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்த போலீசார், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு இலவச தொலைபேசி எண்கள் 181 மற்றும் 1098 தொடர்பு கொண்டு புகாரினை தெரியப்படுத்தலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், கிராமத்தை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare