கொத்தக்கொண்டப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: டிஆர்ஓ பங்கேற்பு

கொத்தக்கொண்டப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: டிஆர்ஓ பங்கேற்பு
X

கொத்தக்கொண்டப்பள்ளி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஷ்வரி தலைமையில் நடைப்பெற்ற 

கொத்தக்கொண்டப்பள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.7.75லட்சம் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை டிஆர்ஓ வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கொத்தக்கொண்டப்பள்ளி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஷ்வரி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைப்பெற்றது.

கூட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களின் 107 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அரசு சார்பில் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய வேலைவாய்ப்பு, சுயதொழில் உள்ளிட்டவற்றை விளக்கமாக பேசியதுடன் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பின்னர் முதியோர் உதவித்தொகை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 7,76,937 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ஒசூர் வட்டாட்சியர் கிருஷ்ண மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சுதா, விஏஓ கோபு மற்றும் தீயணைப்பு,வருவாய், மின்வாரிய உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ், கவுன்சிலர் கௌரம்மா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

Tags

Next Story