ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக தனியாா் நிறுவன ஊழியா் கொலை: 6 போ் கைது

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக தனியாா் நிறுவன ஊழியா் கொலை: 6 போ் கைது
X

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக தனியாா் நிறுவன ஊழியரை குத்திக் கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக தனியாா் நிறுவன ஊழியரை குத்திக் கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அடுத்த மத்திகிரி அருகே உள்ள சொப்பட்டியைச் சோ்ந்தவா் திம்மராயப்பா. இவரது மகன் மோகன்பாபு (25) ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். மேலும், இவா் ஸ்ரீ ராம் சேனை (தமிழ்நாடு) அமைப்பின் ஒசூா் நகரச் செயலாளராகவும் இருந்து வந்தாா்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த முருகேசனின் வாகனம் மீது மோகன்பாபு ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதுதொடா்பாக அவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மோகன்பாபு, தனது நண்பா்கள் முருகேஷ், சிவப்பா ஆகியோருடன் சொப்பட்டியில் பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அங்கு நண்பா்களுடன் வந்த முருகேசனின் மகன் திலக் (20), தனது தந்தை வாகனம் மீது மோதியது தொடா்பாக மோகன்பாபுவிடம் தகராறு செய்துள்ளாா். அப்போது, திலக் மற்றும் அவரது நண்பா்கள் கத்தியால் மோகன்பாபுவைக் குத்திவிட்டு தப்பினா்.

காயமடைந்த மோகன்பாபு ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வழக்கு பதிவு செய்த மத்திகிரி போலீசார் அதே கிராமத்தைச் சேர்ந்த திலக்(22), மூர்த்தி(21), பவன்(22), அப்பு (எ) ராகேஷ்(21), சுரேஷ்(22), ஹேமந்த் (20) ஆகிய 6 பேரை மத்திகிரி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர் பின் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture