கடன் தொல்லையால் தனியார் கம்பெனி ஊழியர் கெலவரப்பள்ளி அணையில் குதித்து தற்கொலை

கடன் தொல்லையால் தனியார் கம்பெனி ஊழியர் கெலவரப்பள்ளி அணையில் குதித்து தற்கொலை
X

பைல் படம்.

ஹட்கோ அருகே அதிக கடன் தொல்லையால் தனியார் கம்பெனி ஊழியர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் நவீன். தனியார் கம்பெனி ஊழியரான இவருக்கு அதிக கடன் தொல்லை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டதால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஹட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!