ஓசூரில் 21 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

ஓசூரில் 21 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
X

அந்திவாடி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் வழங்கி தொடங்கி வைத்தார்.

ஓசூரில் 21 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை எம்எல்ஏ வழங்கினார்.

தைப் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அந்திவாடி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி பருப்பு வெல்லம் கரும்பு உள்ளிட்ட 21 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் வழங்கி தொடக்கி வைத்தாா்.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து பொருட்களை வாங்கி சென்றனா்.

முன்னதாக சமத்துவ பொங்கல் பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!