இரவில் அதிகரிக்கும் வாகன திருட்டு - போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்தலாமே

இரவில் அதிகரிக்கும் வாகன திருட்டு -    போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்தலாமே
X
இரவில் அதிகரிக்கும் வாகன திருட்டை தடுக்க, ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரியில் இருந்து அக்ரஹாரம் செல்லும் சாலையில் வசிப்பவர் முரளி. இவர் கடந்த 6ம் தேதி தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தியிருந்தார். திருட்டு கும்பல் ஒன்று, அவரது காரின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது குறித்து, அவர் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே, திருட்டு கும்பல், காரை திருட முயன்ற சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதேபோல், கடந்த 7ம் தேதி பூவத்தி பகுதியில் மளிகைக்கடை முன்பு நிறுத்தியிருந்த பிக்அப் வேனை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி பாகலூரில் பிக்அப் வேன் ஒன்று திருடப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று மேல்சோமார்பேட்டையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த நர்ஸ் ஒருவரின் டூவீலர் திருட போயுள்ளது.

கிருஷ்ணகிரியில் தொடர்ந்து வாகனங்கள் திருடப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரு கும்பல் சரக்கு வாகனங்களையே குறி வைத்து திருடுகிறது. அவ்வாறு திருடப்படும் வாகனங்களை, கடத்தலுக்கு பயன்படுத்துகிறார்களாக என்ற சந்தேகமும் எழுநதுள்ளது. எனவே, இரவு நேர ரோந்து பணியினை போலீசார் தீவிரப்படுத்தி, வாகன திருட்டு கும்பலை கண்டுபிடித்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future education