ஓசூரில் உற்சாகத்துடன் போகி திருநாள் கொண்டாடிய பொதுமக்கள்

ஓசூரில் உற்சாகத்துடன் போகி திருநாள் கொண்டாடிய பொதுமக்கள்
X

ஓசூரில் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளாம், இன்று போகி திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள்.

ஓசூரில் உற்சாகத்துடன் போகி திருநாளை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளாம், இன்று போகி திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற பழமொழிக்கு ஏற்றார் போல பழைய பொருட்களை தீயிட்டு எரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதேபோல சிறுவர்கள் சிறு பறை இசையை இசைத்து மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப் பட உள்ள நிலையில் ஒவ்வொரு வீடுகளிலும் புது வர்ணம் பூசி தூய்மைப்படுத்தி பொங்கல் திருநாளை கொண்டாட ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!