ஓசூர் மாநகராட்சியில் பெயிண்டர் குத்திக்கொலை: இருவர் கைது

ஓசூர் மாநகராட்சியில் பெயிண்டர் குத்திக்கொலை: இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட மகேந்திரன், லட்சுமணன்

ஓசூர் மாநகராட்சியில் பெயிண்டர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நாளபெட்ட அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன் (56) இவரது இரண்டாவது மனைவி சிவகாமி, இவர் கட்டிட சித்தாளாக வேலை பார்த்து வருகிறார். சிவகாமிக்கும் ஓசூர் வெங்கடேஷ் நகர் பகுதியை சேர்ந்த பெயின்டர் சதீஷ் (32) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த சிவகாமியின் கணவர் லட்சுமணன், பெயிண்டர் சதிஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு லட்சுமணன் அவரது மகன் பார்த்திபன் மற்றும் நண்பர் மகேந்திரன் ஆகியோர் பெயிண்டர் சதீஷை மது அருந்த வருமாறு நாளபெட்ட அக்ரஹாரம் பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.

பின்னர் இரவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது லட்சுமணன் சதீஷிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி மது பாட்டிலை உடைத்து சதீஷின் கழுத்தில் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கொலையாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடிள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஓசூர் நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர போலீசார் கொலை செய்யப்பட்ட சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து போலீஸார் சிவகாமியின் கணவர் லட்சுமணன் மற்றும் அவரது நண்பர் மகேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் லட்சுமணனின் இரண்டாவது மனைவியுடன் சதீஷ் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அடுத்து அதனை நிறுத்திக்கொள்ளுமாறு எச்சரித்து வந்ததாகவும், அதனை ஏற்க மறுத்த சதீஷை நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்று மூன்றுபேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

பின்னர், அவர்களிடையே வக்குவாதம் முற்றி லட்சுமணன் மது பாட்டிலை உடைத்து சதீஷின் கழுத்து பகுதியில் குத்தி கொண்றதாகவும் ஒப்புக் கொண்டனர். அதன் பிறகு அவர்களளை கைது செய்த நகர காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story