ஓசூரில் உழவர் சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் தர்ணா போராட்டம்

ஓசூரில் உழவர் சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் தர்ணா போராட்டம்
X

உழவர் சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஓசூர் உழவர் சந்தை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

உழவர் சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஓசூர் உழவர் சந்தை முன் தர்ணா போராட்டம்

உழவர் சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஓசூர் உழவர் சந்தை முன் தர்ணா போராட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தையில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாக தோட்டங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு அதிகாலை முதல் நண்பகல் ஒரு மணி வரை விறுவிறுப்பான முறையில் வியாபாரம் நடைபெறும் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப காய்கறிகளை வாங்கிச் செல்வர் இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா தாக்கம் அதிகமானதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி அவர்கள் ஓசூர் மாநகராட்சியில் உள்ள உழவர் சந்தையை இரண்டு இடங்களில் பிரித்து நடத்த வேண்டும் என்றும் அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரங்கு என்பதால் உழவர் சந்தை முடப்பட்டிடுந்தது.

இதையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்த இரண்டு இடங்களான ஓசூர் அரசு ஆண்கள் ஆர்வி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், ராமநாயக்கன் ஏரி பகுதிகளில் மாற்ற உழவர் சந்தை அதிகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் திடீர் அறிவிப்பால் நாங்கள் அங்கு செல்ல மாட்டோம் என உழவர் சந்தை முன்பு 100 க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈட்டுப்பட்டனர். தகவல் அறிந்து உழவர் சந்தை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் இதை ஏற்காத விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்று இரண்டு மணி நேரம் உழவர் சந்தையில் கடைகளை வைக்க அனுமதி அளித்து, மாவட்ட ஆட்சியரிடம் பேசி முடிவு தெரிவிப்பதாக கூறினார். இதை ஏற்ற விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!