ஆன்லைன் வியாபாரம் ரூ.62 ஆயிரம் 'அபேஸ்' சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சுவாமி விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் ராஜேஷ்குமார். இவரது தாய் ஓசூரில் தனியார் பாதுகாப்பு உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவருக்காக, கடந்த, 12ம் தேதி தனியார் நிறுவனத்தில் கையுறைகளுக்கு ஆர்டர் காெடுத்த நிலையில், ராஜேஷ்குமார் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட நபர், கையுறைகளுக்கு, 62 ஆயிரம் ரூபாய் விலைப்பட்டியலை அனுப்பி பணம் கேட்டுள்ளார். இதை நம்பி கூகுள் பே மூலம், 62 ஆயிரத்தை ராஜேஷ்குமார் அனுப்பியுள்ளார்.
ஆனால் ஆர்டர் கொடுத்த பொருட்கள் வரவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டவர் ராஜேஷ்குமார் எண்ணை பிளாக் செய்தும் உள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ்குமார், நேற்று கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரணை நடத்த வருகின்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu