ஓசூரில் முதன்முறையாக மாநகராட்சி மேயர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்

ஓசூரில் முதன்முறையாக மாநகராட்சி மேயர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்
X
தகவல் மையம்.
ஓசூரில் முதன்முறையாக நடைபெறும் மாநகராட்சி மேயர் தேர்தலையொட்டி இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சியாக இருந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது ஓசூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் 45 வார்டுகள் உள்ளன. இதில் 23 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை கண்காணித்து வருகிறார்.

மாநகராட்சியில் 5 அலுவலகங்களாக பிரிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. வேட்பு மனுக்கள் பெறப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அரசு கொரோனா விதிமுறைகளையும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

வேட்பு மனு தாக்கல் முதல் நாளான இன்று, இதுவரை வேட்பு மனுக்கள் யாரும் தாக்கல் செய்யவில்லை.

ஓசூரில் 45 வார்டுகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 498 வாக்காளர்கள் மொத்தம் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 292 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 109 பேர், மூன்றாம் பாலினத்தவர் 97 பேர் உள்ளனர்.

மொத்தம் 57 இடங்களில் 248 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அனைத்து வாக்காளர்களுக்கும் 88 வாக்குசாவடிகளில் ஆண் வாக்காளர்களுக்கு 80 வாக்குச் சாவடிகளும், பெண் வாக்காளர்கள் 80 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 47 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் இனங்காணப்பட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வேட்புமனுத்தாக்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மனுவை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், மாநில தேர்தல் அறிவிப்பின் வழிகாட்டுதலின் படியும் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றனர்.

மாநகராட்சி அலுவலகம் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!