குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான   சிறப்பு தொழில் கடன் விழா
X

கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வருகிற 27ம் தேதி வரை குறு, சிறு மற்றும் நடத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நடைபெறுகிறது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வருகிற 27ம் தேதி வரை குறு, சிறு மற்றும் நடத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் விழா நடைபெறுகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சி முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை, சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

இந்நிலையில் வருகிற 27ம் தேதி வரை ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள பிளாட் எண்.308,309ல் உள்ள கிளை அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், விழுக்காடு வடடி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றம் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகிதம் முதலீட்டு மானியம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாமில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future