லாரி டிரைவர் தற்கொலை

லாரி டிரைவர்  தற்கொலை
X
சேமிப்பு பணத்தை எடுத்து குடித்ததை மனைவி கண்டித்ததால், லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் லாரி டிரைவர். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்று இரவு, தனது மனைவியின் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து சென்று மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதை அறிந்த இவரது மனைவி புனிதா, கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீஸ் எஸ்எஸ்ஐ சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!