கெலவரப்பள்ளி, சின்னாறு அணை மீன்பாசி குத்தகைக்கு விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி
கெலவரப்பள்ளி அணை.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி, சின்னாறு அணைகளில் மீன்பாசி குத்தகை எடுப்பதற்கான ஏலத்தில் கலந்துகொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை மற்றும் சூளகிரி சின்னாறு அணை ஆகியவற்றில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை எடுத்துக்கொள்வதற்கான ஏலம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் 13ம் தேதி பகல் 12 மணிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், மீன்பாசி குத்தகை விண்ணப்பங்கள் மற்றும் அதன் விவரங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.24-25 கோ-ஆப்ரேட்டிவ் காலனி, 4வது குறுக்கு தெரு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04343-235745 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் அறியலாம்.
மேலும், ஒப்பந்தப்புள்ளியானது ஒவ்வொரு அணைக்கும் தனித்தனியே உரிய ஆவணங்களை இணைத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர், எண்.571,அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 35 என்ற முகவரிக்கு வருகிற 13ம் தேதி பகல் 12 மணிக்குள் கிடைத்திடுமாறு அனுப்பி வைக்க வேண்டும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu