ஒசூரில் ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை ரவுடிகள் வெறிச்செயல்

ஒசூரில் ரியல் எஸ்டேட் அதிபர்  சுட்டுக்கொலை ரவுடிகள்  வெறிச்செயல்
X
ஓசூர் அருகே 5 லட்சம் பணம் கொடுக்காததால் ரவுடிகள் ரியல் எஸ்டேட் அதிபரரை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

ஒசூர் அருகேயுள்ள தளி பெல்லூர் கிராமத்தை சேர்ந்த சந்திரப்பா என்பவரது மகன் லோகேஷ் (36) இவரது மனைவி ஜெயந்தி, லோகேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு பெல்லூர் கிராமத்திற்கு இனோவா காரில் 3 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். அவர்கள் லோகேஷ் வீட்டிற்குள் புகுந்து அவரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது லோகேஷ் பணத்தை கொடுக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் லோகேஷை சுட்டுள்ளனர். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் பாய்ந்துள்ளது. இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு கொலை சம்பவம் குறித்து லோகேஷ்ன் மனைவி ஜெயந்தி தளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ஒசூர் பகுதிகளில் வலம் வரும் பிரபல ரௌடி கஜா மற்றும் அவரது நன்பர் எதுபூசன்ரெட்டி உள்ளிட்ட சிலர் இந்த சம்பத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் மீது பல்வேறு கொலை வழக்குகள், பணம் கேட்டு மிரட்டி ஆள்களை கடத்துதல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒசூர் மற்றும் தளி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!