காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக கர்நாடகா: சி.மகேந்திரன்
ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் சி மகேந்திரன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய அரசு மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு விடுதலை பெற்றதற்குப் பிறகு இதைப் போன்ற ஒரு மோசமான செயல்பாடுகள் இந்தியாவில் நடந்ததே கிடையாது. உச்சநீதிமன்ற நீதிபதி வலுக்கட்டாயமாக எந்தவிதமான காரணமும் இல்லாமல் மாறுதல் செய்திருக்கின்றனர். அதேபோல பாராளுமன்றம் என்ற ஒரு பதினைந்து இருபது நாட்களுக்கு பிறகு அதை தொடங்க இருக்கின்றனர்.
அதுக்குள்ள அவசரம் அவசரமாக மத்திய ஒன்றிய புலனாய்வுத்துறை அந்த உறுப்பினரின் காலம் இரண்டு வருடம் தான், ஆனால் அதை ஐந்து வருடமாக உயர்த்தியுள்ளார். அதே போல அமலாக்கத் துறையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை இரண்டு வருடம் என்பது ஐந்து வருடமாக மாற்றியிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் வரக்கூடிய இந்த நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு தெரியாமல் ஒரு அவசர சட்டத்தின் மூலம் இப்படி செய்கின்ற இந்த செயல் என்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. ஜனநாயகத்தை வீழ்த்த கூடியதாக தெரிகிறது. உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறத, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவின் சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறது.
அதேபோல தமிழகத்தினுடைய முதலமைச்சர் இந்த விவசாய வேளாண் பாதிப்புகளை பார்ப்பதற்கு சென்றவர் வேளாண் பிரச்சினைகள் வெள்ளத்திற்கு பிறகு ஊழல் ஒழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கையில் இறங்குவதாக குறிப்பிட்டிருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முழுமையாக நான் வரவேற்கிறேன்.
அடித்தளத்திலிருந்து உயர் தளத்தில் வரை எல்லா மட்டங்களிலும் ஒரு ஊழலற்ற நிர்வாகத்தை தமிழக அரசு தர வேண்டும் என்பதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல பத்திரிகைகளிலே மிகப் பரபரப்பாக ஜெய் பீம் படம் உண்மையிலேயே எங்களைப்போன்ற போராடுகின்றது ஐம்பது அறுபது ஆண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீதிமன்றத்தை எதிர்த்துப் போராடி அவர்களுக்கு போராடிய கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல அதோடு இணைந்து மன்ற வழக்கறிஞர்கள் அத்தனை பெயரையும் கௌரவப்படுத்தக் கூடிய படமாக இந்த படம் அமைந்திருக்கிறது. அந்த படத்தை அதன் கருத்துக்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
அதற்கு என்னுடைய முழு ஆதரவை நாங்கள் தருகின்றோம் அந்த படத்துக்கு எதிராக நடைபெறக்கூடிய நடவடிக்கை சரியானது அல்ல என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கூறிக் கொள்வதோடு, இப்படிப்பட்ட சமுதாய விழிப்புணர்வு கொண்ட படங்களை தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி நதிநீா்ப் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் அரசியல் செய்துவருகிறது கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை பேசிய குறித்த கேள்விக்கு, அவங்கதான் அரசியல் பண்றாங்க யார் அரசியல் பண்றது காவிரி நீர் பிரச்சினையில் அரசியல் பண்ண கூடிய மாநிலமும் அதனுடைய முதலமைச்சர் தான் 1924ல் இருந்து தொடங்கிய இந்த வருடம் வரைக்கும் பார்த்தீங்கனா சட்டத்திற்கு புறம்பாக இந்திய சட்டத்திற்கு புறம்பாக அரசியல் செய்து கொண்டிருக்கக் கூடிய மாநிலம்தான் கர்நாடக மாநிலம் என்பதை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கூறிக்கொள்கிறேன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu